16 வயதுக்குட்பட்டவர்கள் இனி இன்டர்நெட் பயன்படுத்த முடியாதா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை

இந்தியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கு சட்டப்பூர்வ தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆஸ்திரேலியாவைப் போலவே இந்தியாவிலும் இத்தகைய கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கலாம் என்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய மதுரை கிளை அமர்வு ஒரு மனுவை விசாரிக்கும் போது தெரிவித்தது.
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இணையதளங்களில் ‘பெற்றோர் கண்காணிப்பு வசதி’ (Parental Window) மற்றும் பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. டிஜிட்டல் உலகில் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்கவும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.