இனி செக் பவுன்ஸ் ஆனால் 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை

பணப்பரிமாற்றத்தில் செக் பவுன்ஸ் சிக்கல்களைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இனி செக் பவுன்ஸ் ஆனால் 24 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான காசோலைகளுக்கு ‘பாசிட்டிவ் பே சிஸ்டம்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காசோலை விவரங்களை முன்கூட்டியே வங்கிக்குத் தெரிவிப்பதன் மூலம் மோசடிகள் தவிர்க்கப்படும்.
திட்டமிட்டு செக் பவுன்ஸ் செய்பவர்களுக்கு முன்பு இருந்த ஓராண்டு சிறைத் தண்டனை தற்போது இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறு செய்பவர்களின் செக் புக் வசதி ரத்து செய்யப்படும். இருப்பினும், வங்கியில் போதிய பணம் இருந்தும் தொழில்நுட்பக் கோளாறால் செக் பவுன்ஸ் ஆனால் வாடிக்கையாளர் அபராதம் செலுத்தத் தேவையில்லை. இதற்காக பிரத்யேக ஆன்லைன் புகார் போர்ட்டலையும் ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.