இந்து நண்பர்களுக்கு முதலில் விருந்து கொடுத்ததால் சர்ச்சை பரேலியில் முஸ்லிம் விவசாயி மகளின் திருமண விருந்து புறக்கணிப்பு
December 18, 2025

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் விவசாயி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக இந்து நண்பர்களுக்கு முதலில் சைவ விருந்து அளித்ததால் சர்ச்சை வெடித்தது. உள்ளூர் மௌலவிகளின் தூண்டுதலால் கிராம மக்கள் இந்த விருந்தை புறக்கணித்தனர். இதனால் அந்த குடும்பத்திற்கு பல லட்ச ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதோடு மன உளைச்சலும் உண்டானது.
இது தொடர்பாக விவசாயி காவல்துறையில் புகார் அளித்தார். பின்னர் கிராம மக்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டதையடுத்து, இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டு புகார் வாபஸ் பெறப்பட்டது. தற்போது அங்கு நிலைமை சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.