இந்தியாவிற்கு முன்பே 2026 புத்தாண்டை கொண்டாடி தீர்த்த நாடுகள் எது தெரியுமா

இந்தியாவிற்கு முன்பே 2026 புத்தாண்டை கொண்டாடி தீர்த்த நாடுகள் எது தெரியுமா

உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்காக காத்திருக்கும் நிலையில், இந்திய நேரத்திற்கு சுமார் 9 மணி நேரத்திற்கு முன்பே பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி நாட்டில் 2026 புத்தாண்டு பிறந்தது. கிரிபாட்டியின் கிரிதிமதி தீவில் மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். கால மாற்றத்தின் அடிப்படையில் உலகிலேயே முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் இடமாக இந்த தீவு கருதப்படுகிறது.

கிரிபாட்டியைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சாதம் தீவுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கின. சுமார் 600 பேர் மட்டுமே வசிக்கும் இந்த சிறிய தீவில் மக்கள் ஒன்று கூடி 2025 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2026 ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கடல் மட்ட உயர்வு போன்ற இயற்கை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், இந்த தீவுவாசிகள் உலகின் முதல் நபர்களாக புத்தாண்டை கொண்டாடும் பெருமையைப் பெற்றுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *