இந்தியாவின் துல்லியமான தாக்குதலுக்கு பணிந்தது பாகிஸ்தான்! பெரும் சேதத்தை ஒப்புக்கொண்டார் அந்நாட்டு துணை பிரதமர்

இந்தியாவின் துல்லியமான தாக்குதலுக்கு பணிந்தது பாகிஸ்தான்! பெரும் சேதத்தை ஒப்புக்கொண்டார் அந்நாட்டு துணை பிரதமர்

இந்தியாவின் வான்வழித் தாக்குதலில் பாகிஸ்தான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் இந்தியாவின் தாக்குதலால் சேதமடைந்ததாகவும், இதில் பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த 36 மணி நேரத்தில் இந்தியா சுமார் 80 ட்ரோன்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பியதாக இஷாக் தார் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 79 ட்ரோன்களை பாகிஸ்தான் படைகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறினாலும், ஒரு ட்ரோன் இலக்கைத் தாக்கி அழித்துள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் ராணுவ வலிமையை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், பாகிஸ்தானின் பாதுகாப்பு அடுக்கில் உள்ள ஓட்டைகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *