இந்தியா – பாகிஸ்தான் மகா யுத்தம்: பாபர் அசாம் படை வருகிறதா? பயிற்சியாளர் கொடுத்த அதிரடி அப்டேட்!

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து, பின்னர் அந்த முடிவை வாபஸ் பெற்றுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து இந்தியத் தரப்பு தனது மௌனத்தைக் கலைத்துள்ளது.
இது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரையான் டென் டோஷேட் கூறுகையில், “பிசிசிஐ அல்லது ஐசிசியிடமிருந்து வேறு எந்த உத்தரவும் வராத வரை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட அட்டவணைப்படியே நாங்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசியலைத் தாண்டி மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்கள் இலக்கு” என்று தெரிவித்துள்ளார். இந்திய அணி வரும் வியாழக்கிழமை டெல்லியில் நமீபியாவை எதிர்கொள்கிறது, அதன் பிறகு பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதவுள்ளது.
பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஐசிசியின் இந்த சமரச முயற்சியைப் பாராட்டியுள்ளார். லாகூரில் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக தீர்வு காணப்பட்டது கிரிக்கெட்டின் நலனுக்கு நல்லது என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் இந்த முடிவால் ஐசிசி நிம்மதி அடைந்துள்ளது. இந்த மெகா போட்டி நடைபெறுவதன் மூலம் சுமார் ₹1,500 கோடி நிதி இழப்பிலிருந்து ஐசிசி தப்பியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதலைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது ஆவலுடன் காத்திருக்கிறது.