இந்திய அரசியலமைப்பை மதிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

செய்தி பிரிவு : உங்கள் தனிப்பட்ட தகவல்கள் வாட்ஸ்அப்பில் பாதுகாப்பாக இருக்கிறதா? தரவு பாதுகாப்பு தொடர்பான வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய சட்டங்களையும் அரசியலமைப்பையும் பின்பற்ற முடியாவிட்டால், இந்த நாட்டை விட்டு வெளியேறலாம் என்று நீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது. மக்களின் தனிப்பட்ட ரகசிய காப்புரிமையில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
வணிக லாபத்திற்காக பயனாளர்களின் தகவல்களை மற்ற செயலிகளுடன் பகிர்ந்து கொள்ள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான கொள்கைகளை வைத்து அவர்களைச் சுரண்டுவதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதித் தீர்ப்பு வரும் வரை பயனாளர்களின் தரவுகளைப் பகிரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.