இங்கிலாந்து சுடுகாட்டில் மனித எலும்புக்கூட்டுடன் நடனமாடிய மர்ம பெண் வைரலாகும் அதிர்ச்சி காட்சி

இங்கிலாந்து சுடுகாட்டில் மனித எலும்புக்கூட்டுடன் நடனமாடிய மர்ம பெண் வைரலாகும் அதிர்ச்சி காட்சி

இங்கிலாந்தில் உள்ள ஹால் ஜெனரல் மயானத்தில் பெண் ஒருவர் மனித எலும்புக்கூட்டுடன் நடனமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி மதியம், நன் போன்ற உடை அணிந்த பெண் ஒருவர் மனித எலும்புக்கூடு மற்றும் நாயுடன் விளையாடுவதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். சுமார் 50 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க மயானத்தில் அரங்கேறிய இந்த விசித்திரமான காட்சியால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.

உள்ளூர் மக்களிடையே இது குறித்த செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அந்த பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகி உண்மையை உறுதிப்படுத்தியுள்ளன. 1847-இல் கட்டப்பட்ட இந்த மயானம் காலரா நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது. பட்டப்பகலில் மனித எலும்புக்கூட்டுடன் அந்த பெண் மகிழ்ச்சியாக நடனமாடியது ஏன் என்பது குறித்து மக்கள் பலவாறாக பேசி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *