ஆரவல்லி மலைத்தொடரை காக்க உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
December 28, 2025

ஆரவல்லி மலைத்தொடர் பாதுகாப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணை தேதியை உச்ச நீதிமன்றம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிட்டது. இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான விடுமுறை கால அமர்வு வரும் டிசம்பர் 29 திங்கள்கிழமை அன்று இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுற்றுசூழல் பாதுகாப்பில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தலையீடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.