அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா பதவியேற்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் ஈரான் புதிய உச்ச தலைவராக மோஜ்தபா பதவியேற்பு

ஈரானின் உச்ச மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மோஜ்தபா புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 56 வயதான மோஜ்தபா இனி ஈரான் ராணுவம் மற்றும் புரட்சிகரப் படைகளின் தலைமைப் பொறுப்பை கவனிப்பார் என்று அந்நாட்டின் நிபுணர்கள் சபை அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் நடந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இக்கட்டான சூழலில் ஈரானின் அதிகாரப் பொறுப்பை மோஜ்தபா ஏற்றிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மண்டல ரீதியிலான பாதுகாப்பு மற்றும் போர்ச் சூழலில் இது முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *