சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு அதிரடி முடிவு

சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு அதிரடி முடிவு

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு நாடு தழுவிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும், தினசரி பயன்பாட்டு நேரத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் ஏற்கனவே இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசும் இதில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தியாவில் 49 சதவீத குழந்தைகள் நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆன்லைன் தளங்களில் செலவிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் கவனக்குறைவு மற்றும் அடிமையாதல் போன்ற பாதிப்புகளைத் தடுக்க ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளைப் பின்பற்றி இந்தியாவிலும் சட்டம் வரவுள்ளது. குறிப்பாக 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமற்ற இணையப் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *