Post Office Scheme: மாதம் ரூ. 5,550 உறுதி வருமானம்! எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

Post Office-இன் Monthly Income Scheme (MIS)-இல், ஒரே முறை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் உறுதியான மாதாந்திர வருமானத்தை பெறலாம். தற்போது இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. ஒரு தனிப்பட்ட கணக்கில் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கில் நிலையான ரூ. 5,550 வட்டி கிடைக்கும். இது உங்கள் மாதாந்திர வருமானத்திற்கு நம்பகமான ஆதாரமாக அமையும்.
இந்த கவர்ச்சிகரமான திட்டத்தில், வெறும் ரூ. 1,000-இல் கூட கணக்கைத் தொடங்கலாம். கூட்டு கணக்கில் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் காலக்கொண்ட இந்தத் திட்டத்தின் முதிர்ச்சியின் போது, முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையும் பாதுகாப்பாக திரும்பப் பெறப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் வழக்கமான வருமானத்தை விரும்புவோருக்கு, இந்த MIS திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும்.