Instagram காதல்: வீட்டிலிருந்து ஓடிப்போன கொல்கத்தா பள்ளி மாணவி டெல்லியில் மீட்பு

Instagram காதல்: வீட்டிலிருந்து ஓடிப்போன கொல்கத்தா பள்ளி மாணவி டெல்லியில் மீட்பு

கொல்கத்தாவைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரை டெல்லியில் உள்ள சுல்தான்புரி பகுதியில் இருந்து டெல்லி காவல்துறையின் குற்றப் பிரிவு, மனித கடத்தல் தடுப்புப் பிரிவு (AHTU) மீட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனுடன் காதல் ஏற்பட்டதை அடுத்து, அந்த மாணவி வீட்டிலிருந்து ஓடி டெல்லிக்குச் சென்றிருந்தார். இருவரும் காணாமல் போனது குறித்து கொல்கத்தா மற்றும் டெல்லியில் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இரு மாநில காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

நவம்பர் 9, 2025 முதல் மாணிக்க்தலா காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி காணாமல் போயிருந்தார். டெல்லி காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் நண்பருடன் சேர்ந்து டெல்லிக்கு வந்து சுல்தான்புரியில் வாடகை அறையில் தங்கியது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பெற்றோர்கள் தங்கள் மைனர் குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மீட்கப்பட்ட மாணவி மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சுல்தான்புரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *