Ambani’s Antilia-வில் தினமும் 4000 சப்பாத்திகள்! வியக்க வைக்கும் காரணம் இதுதான்

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மும்பை இல்லமான ‘ஆண்டிலியா’ நவீனத்துவமும் பாரம்பரியமும் கலந்த ஒரு பிரம்மாண்டமான அடையாளச் சின்னமாகும். 27 தளங்களைக் கொண்ட இந்த ஆடம்பரமான மாளிகையை நிர்வகிக்க, பல்வேறு ஷிஃப்டுகளில் ஏராளமான சமையல்காரர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அம்பானி குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், இந்த ஊழியர்கள் அனைவருக்கும் புதிய உணவு தினமும் இங்கேயே சமைக்கப்படுகிறது.
டிஎன்ஏ (DNA) செய்தி நிறுவனத்தின்படி, ஆண்டிலியாவின் சமையலறையில் தினமும் சுமார் 4,000 சப்பாத்திகள் தயாரிக்கப்படுகின்றன. அம்பானி குடும்பத்தினர் மற்றும் வட இந்திய ஊழியர்களின் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப இந்த சப்பாத்திகள் செய்யப்படுகின்றன. இங்கு அசைவம் அனுமதிக்கப்படுவதில்லை, முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. மேலும், உணவுகள் வீணாகாமல் இருக்க, மீதமுள்ள உணவுகளை உடனடியாக அருகில் உள்ள அனாதை இல்லங்களுக்கு அனுப்பி வைப்பது இந்த மாளிகையின் ஒரு சிறப்பம்சமாகும்.