ஹோட்டல் அறையில் கொடூரம்! காதலனை தாக்கிய காதலிக்கு ஏற்பட்ட சோகமான முடிவு

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் மற்றும் அவரது காதலன் காயமடைந்தார். லூதியானாவைச் சேர்ந்த அமித் நிஷாத் மற்றும் இரண்டு குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணுக்கு இடையே காதல் உறவு இருந்தது. கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியிருந்த அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமித்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார், ஆனால் அமித் மறுத்துவிட்டார். இந்த சூழலில், நேற்று இருவரும் லூதியானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர்.
அங்கு திருமணப் பிரச்சனை மீண்டும் எழுந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காதலி திடீரென கத்தியால் அமித்தின் அந்தரங்க உறுப்பைத் தாக்கினார். வலியால் துடித்த அமித், பதிலுக்கு அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். ஹோட்டல் ஊழியர்களின் தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, சில மணி நேரங்களிலேயே தப்பியோடிய அமித் நிஷாத்தை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் லூதியானா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.