மத்திய கிழக்கு போர் பதற்றம் எதிரொலியாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

மத்திய கிழக்கு போர் பதற்றம் எதிரொலியாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலை எதிர்கொள்ளும் நோக்கில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கலந்துகொண்டனர். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கமாகும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்கவில்லை. இருப்பினும், அந்த மாநிலங்களின் தயார் நிலை குறித்து தலைமைச் செயலாளர்களுடன் அமைச்சரவை செயலகம் தனியாக ஆலோசனை நடத்தவுள்ளது. போர்ச் சூழலில் நாட்டின் உள்நாட்டு ஸ்திரத்தன்மையை பேணுவதே மத்திய அரசின் தற்போதைய முன்னுரிமையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *