காதல் விவகாரத்தில் கடத்தல் வழக்கு எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
March 27, 2026

காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தும், சமூக பாதுகாப்பு கருதி வாதாடியும் பலன் அளிக்கவில்லை.
மனுதாரர் தரப்பில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக கூறி வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரியதை அடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்த இந்த பரபரப்பான கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.