போர் பதற்றத்திலும் தடையின்றி கிடைக்கும் வணிக சிலிண்டர்கள் குறித்த மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்ட போதிலும், இந்தியாவில் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தற்போது 70 சதவீதம் வரை சீரடைந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனுடன் இயங்குவதால் உற்பத்தி 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் இறக்குமதியில் சிக்கல் நீடித்தாலும், உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து சுமார் 30 ஆயிரம் டன் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 5 கிலோ எடையுள்ள சிறிய சிலிண்டர்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன. இரும்பு மற்றும் வாகன உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.