அசாமில் 5 லட்சம் பிகா நிலத்தை மீட்க முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அதிரடி அறிவிப்பு

அசாமில் 5 லட்சம் பிகா நிலத்தை மீட்க முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அதிரடி அறிவிப்பு

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பஜாலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முக்கிய வாக்குறுதியை அளித்தார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் பிகா அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படும் என்று அவர் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்கனவே 1.5 லட்சம் பிகா நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அசாம் மண்ணில் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று குறிப்பிட்ட முதல்வர், சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். காங்கிரஸ் கட்சி மண்ணின் மைந்தர்களை விட மற்றவர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அசாமின் 126 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்று, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *