ஏப்ரல் 6 வரை ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திவைக்க டிரம்ப் அதிரடி முடிவு
March 27, 2026

ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதால் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை ஏற்கனவே அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறினார். ஈரானின் ஏவுகணை பலம் தற்போது 9 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஒப்பந்தங்கள் எட்டப்படாவிட்டால் மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.