அமெரிக்காவை விட்டு வெளியேறினால் 2.40 லட்சம் ரூபாய் பரிசுடன் இலவச விமான டிக்கெட்
March 18, 2026

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வெளியேறுவோருக்கு அபராதம் இன்றி இலவச விமான டிக்கெட் மற்றும் 2,600 டாலர் (சுமார் ₹2.40 லட்சம்) ஊக்கத்தொகை வழங்கப்படும். நாடு கடத்தும் செலவை விட இது குறைவு என்பதால் அமெரிக்க அரசு இந்த வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
குறிப்பாக இந்தியர்களை இலக்கு வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 2025 முதல் சுமார் 22 லட்சம் பேர் இந்த வசதியைப் பயன்படுத்தி வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் இதற்கு வரவேற்பு இருந்தாலும், சட்டவிரோத குடியேறிகளுக்கு பணமுடிப்பு வழங்குவது தவறான முன்னுதாரணம் என ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.