எம்ஜிஆரின் அமைச்சர் கனவு முதல் ஊழல் புகார் வரை, திமுக உடைந்த பின்னணி
March 16, 2026

1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி இடையிலான மோதல் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் தனக்கு ‘மருத்துவ அமைச்சர்’ பதவி கோரிய நிலையில், சட்ட சிக்கல்களால் அவருக்கு சிறுசேமிப்புத் திட்டத் தலைவர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த எம்ஜிஆர், திமுக அமைச்சர்களின் சொத்துக் கணக்கைக் கேட்டு ஊழல் புகார்களை எழுப்பினார்.
எம்ஜிஆரை ஓரங்கட்ட கருணாநிதி தனது மகன் மு.க. முத்துவை திரையுலகில் அறிமுகப்படுத்தினார். இந்த அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியபோது, எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அண்ணாவின் கொள்கையிலிருந்து திமுக விலகிச் செல்வதாக எழுந்த விமர்சனங்களும், எம்ஜிஆரின் நீக்கமும் அக்கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், புதிய அரசியல் மாற்றத்திற்கும் வழிவகுத்தது.