ஈரானிய மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா நிதியுதவி வழங்கி பெரும் ஆதரவு
March 14, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவ சீனா முன்வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுமார் 2 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என ஷி ஜின்பிங் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிதி சீன செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஈரானிய செம்பிறை சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் ஈரானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயாராக உள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஈரானுக்கு இன்னும் பெரிய அளவிலான உதவிகளை வழங்க உள்ளதாக பெய்ஜிங் உறுதியளித்துள்ளது. மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழலில் சீனாவின் இந்த நடவடிக்கை மிக முக்கியமான ஒரு ராஜதந்திர ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.