ரஜினியை மிரட்டியதா திமுக? டிவி கே நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் ரகுபதி கொடுத்த அதிரடி பதிலடி

ரஜினியை மிரட்டியதா திமுக? டிவி கே நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிற்கு அமைச்சர் ரகுபதி கொடுத்த அதிரடி பதிலடி

திமுக மிரட்டியதால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என டிவி கே நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறிய புகாரை அமைச்சர் ரகுபதி முற்றிலுமாக மறுத்துள்ளார். ரஜினிகாந்தை யாராலும் மிரட்ட முடியாது என்றும், அவர் திமுகவின் நீண்டகால நண்பர் என்றும் அமைச்சர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியல் ஆதாயத்திற்காகவே விஜய் கட்சியினர் இவ்வாறு பொய் பரப்புரை செய்வதாக அவர் சாடினார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், மற்ற மாநிலங்களை விட தமிழகமே பாதுகாப்பானது என்றும் கூறிய அவர், 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *