டெல்லி பறக்கும் விஜய் சிபிஐ விசாரணை நிழலில் அமித்ஷாவுடன் ரகசிய அரசியல் பேச்ச்சா

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கட்சி மாநாட்டில் நடந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராக உள்ள நிலையில், இந்த பயணத்தின் பின்னணியில் பாஜக மேலிடத்தின் அழைப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்து அவர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
விஜய்யின் இந்த திடீர் பயணத்தை ஒட்டி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். திமுகவை வீழ்த்த கூட்டணி அவசியம் என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், கட்சியின் கொள்கை முடிவுக்கு எதிராக பாஜகவுடன் கைகோர்ப்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. தேர்தலுக்கு முன்பே அரங்கேறும் இந்த டெல்லி பயணம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.