வங்கதேசத்தை நிலைகுலைய வைத்த 20 வயது பாகிஸ்தான் வீரர் தொடரை சமன் செய்தது பாகிஸ்தான்
March 14, 2026

வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 128 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இளம் வீரர் மாஸ் சதாகத்தின் அதிரடி 75 ரன்கள் மற்றும் சல்மான் ஆகாவின் 64 ரன்களால் 274 ரன்களை எடுத்தது. வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மழையால் இலக்கு 32 ஓவர்களில் 243 ரன்களாக மாற்றப்பட்டது. கடினமான இலக்கை துரத்திய வங்கதேசம், ஷாஹீன் அப்ரிடி மற்றும் மாஸ் சதாகத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 114 ரன்களுக்கு சுருண்டது. லிட்டன் தாஸ் 41 ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிரட்டிய மாஸ் சதாகத் பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.