பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறாரா விஜய்? மாவட்டச் செயலாளர்கள் அதிரடி ஆதரவு

பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறாரா விஜய்? மாவட்டச் செயலாளர்கள் அதிரடி ஆதரவு

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்டிஏ கூட்டணியில் சேருவது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற 120 மாவட்டச் செயலாளர்களில், சுமார் 98 பேர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பாஜகவைத் தனது கொள்கை எதிரி என விஜய் அறிவித்திருந்தாலும், தற்போது பவன் கல்யாண் போன்றோர் மூலம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் விஜய்க்கு 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனப் பேசப்படுகிறது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இறுதி முடிவை எடுக்கப்போகும் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *