தூக்கத்தில் மூச்சுத்திணறலால் தவிக்கும் 5 கோடி இந்தியர்கள் ஆரோக்கியத்தை சீரழிக்கும் தூக்கமின்மை குறித்த அதிர்ச்சித் தகவல்
March 14, 2026

இந்தியாவில் நிலவும் தூக்கமின்மை பாதிப்பு தற்போது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, 46 சதவீத இந்தியர்கள் நாளொன்றுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே உறங்குகின்றனர். இதில் சுமார் 5.2 கோடி மக்கள் தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) போன்ற தீவிர பாதிப்புகளுக்கு உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக 97 சதவீத ஐடி ஊழியர்கள் உறங்குவதற்கு முன் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது அவர்களின் உடல் நலத்தைப் பாதிக்கிறது. போதிய உறக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்விற்கு நாளொன்றுக்கு 6 முதல் 8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.