சென்னையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் கேட்டரிங் நிறுவனங்கள்

சென்னையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் கேட்டரிங் நிறுவனங்கள்

போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வணிக ரீதியிலான காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையின் உணவுத் தொழில் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய விறகு அடுப்புகளைத் தூசு தட்டி மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர் கேட்டரிங் உரிமையாளர்கள். இதனால் நேர விரயம் மற்றும் சுகாதாரச் சவால்கள் ஏற்பட்டாலும், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேறு வழியின்றி இம்முடிவை எடுத்துள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் மின்சார அடுப்புகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். பல உணவகங்களில் இட்லி, தோசை போன்ற முக்கிய உணவுகள் கிடைக்காது என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சமையல் கலைஞர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர், மேலும் நகரில் மின்சார அடுப்புகளின் விற்பனை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *