ரிஷி கபூரின் பெயர் மற்றும் அடையாளத்தைப் பயன்படுத்த தடை விதித்த ரன்பீர் கபூர்

ரிஷி கபூரின் பெயர் மற்றும் அடையாளத்தைப் பயன்படுத்த தடை விதித்த ரன்பீர் கபூர்

மறைந்த மெகா ஸ்டார் ரிஷி கபூரின் பெயர், குரல் மற்றும் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கபூர் குடும்பத்தினர் அதிரடி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். ரன்பீர் கபூர் மற்றும் நீது கபூர் ஆகியோர் ரிஷி கபூரின் ‘ஆளுமை உரிமைகளைப்’ (Personality Rights) பாதுகாக்க முடிவு செய்துள்ளனர். இனிமேல் வணிக ரீதியான விளம்பரங்கள் அல்லது பொதுத் திட்டங்களுக்கு அவரது அடையாளத்தைப் பயன்படுத்த குடும்பத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஐந்து தசாப்தங்களாக இந்தி சினிமாவில் முத்திரை பதித்த ரிஷி கபூரின் புகழைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதைத் தடுப்பதே இந்த சட்டப் பாதுகாப்பின் முக்கிய நோக்கமாகும். அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரிஷி கபூரின் அடையாளத்தைப் பயன்படுத்தி முறையற்ற வணிக லாபம் ஈட்டும் முயற்சிகளுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *