சன்ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர் கிளம்பிய சர்ச்சைக்கு பயிற்சியாளர் வெட்டோரி அதிரடி பதில்
March 13, 2026

லண்டனில் நடைபெற்ற ‘தி ஹண்ட்ரட்’ ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 2.34 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது. இந்திய உரிமையாளர்களைக் கொண்ட அணியில் பாகிஸ்தான் வீரர் சேர்க்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், அந்த அணியின் எக்ஸ் பக்கமும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை ஏதும் இல்லை என்று கூறினார். அடில் ரஷித் கிடைக்காததால், திறமையான மாற்று வீரராகவே அப்ரார் தேர்வு செய்யப்பட்டார். அணியின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.