மோடியின் திருச்சி உரை கபட நாடகம் விவசாயிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் பாடம் எடுப்பதா என ரகுபதி கடும் தாக்கு

திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ரகுபதி, 700 விவசாயிகளின் மரணத்திற்கு காரணமான மோடிக்கு விவசாயம் குறித்து பேச தார்மீக உரிமை இல்லை என விமர்சித்துள்ளார். டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் மீது வன்முறையை ஏவிவிட்ட பிரதமர், தற்போது தமிழகத்தில் வந்து நீலிக்கண்ணீர் வடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மோடி ஆட்சியில் விவசாயிகள் வருமானம் உயரவில்லை, மாறாக தற்கொலைகளே அதிகரித்துள்ளன என்றார்.
விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் மற்றும் நெல் கொள்முதல் விலையை உயர்த்தியவர் முதல்வர் ஸ்டாலின் மட்டுமே என்று குறிப்பிட்ட ரகுபதி, எடப்பாடி பழனிசாமியும் விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக சாடினார். அமெரிக்க விவசாய பொருட்களுக்கு வரி குறைப்பு செய்து இந்திய விவசாயத்தை மத்திய அரசு அழித்து வருவதாகவும், மக்கள் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலையேற்றத்தால் தத்தளிப்பதாகவும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.