எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை மும்பை துறைமுகத்திற்கு வந்தடைந்தது கச்சா எண்ணெய் கப்பல்

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை மும்பை துறைமுகத்திற்கு வந்தடைந்தது கச்சா எண்ணெய் கப்பல்

நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெட்ரோலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி மக்களிடையே பரவி வருகிறது. மத்திய அரசு மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் தகவல்படி, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை. குறிப்பாக, தமிழகத்தில் சுமார் 21 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு சீராக உள்ளது.

ஈரான் ஹேர்மூஸ் நீரிணையை திறந்ததைத் தொடர்ந்து, மும்பை துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் கப்பல் வந்தடைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 50 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் அச்சப்படாமல் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிப்பதைத் தவிர்த்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *