முதல்வர் இல்லத்திற்கு அருகிலேயே அரங்கேறிய கொடூரம் குறித்து அண்ணாமலை வெளியிட்ட அதிரடி அறிக்கை
March 12, 2026

சென்னையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இல்லத்திலிருந்து பத்து நிமிட தொலைவில் இச்சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விளாத்திகுளம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமைகளின் வடுக்கள் மறையும் முன்பே இந்த விபரீதம் நடந்துள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இத்தகைய தொடர் குற்றங்கள் அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.