பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பங்க் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பங்க் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் திரண்டனர். இந்த சூழலில் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், இந்தியாவில் அடுத்த 90 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 7000 பெட்ரோல் பங்குகளில் 21 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாக மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார். விநியோகம் சீராக உள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி அதிகளவில் எரிபொருளை வாங்கிச் சேமித்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *