ஈரான் முன்வைக்கும் மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்

ஈரான் முன்வைக்கும் மூன்று நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில், போரை நிறுத்த ஈரான் தயார் என அதிபர் மசூத் பெசெஷ்கியான் அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் வளைகுடா நாடுகள் மீதான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்த ஈரான் முன்வந்துள்ளது.

ஈரானின் ‘சட்டபூர்வ உரிமைகளை’ அங்கீகரித்தல், போர்க்கால இழப்பீடு மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கான சர்வதேச உத்தரவாதம் ஆகிய மூன்று கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். ஈரான் அழிவின் விளிம்பில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினாலும், இரு நாடுகளுக்கும் இடையே இன்றும் தாக்குதல்கள் தொடர்கின்றன. இது உலக அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *