சென்னையில் மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
March 12, 2026

சென்னையில் புராஜெக்ட் பணிக்காக வந்த கல்லூரி மாணவி மர்ம கும்பலால் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு மயக்கப் பொடி தூவி இழைக்கப்பட்ட இந்த அநீதி மற்றும் தொடர்ந்து அவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அன்புமணி, மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க முடியாத திமுக அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்கக் கூடாது எனச் சாடியுள்ளார். பெண்களும் குழந்தைகளும் நடமாட முடியாத சூழல் நிலவுவதால், இந்த ‘கையாலாகாத’ அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.