தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுடன் இந்த மாத இறுதிவரை மட்டுமே பெட்ரோல் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ள தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு எல்பிஜி உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கேஸ் சிலிண்டர் முன்பதிவு எண் முடங்கியுள்ளதால் ஏஜென்சிகளில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பெட்ரோல் பங்க்குகளிலும் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். எரிபொருளை பதுக்கினாலோ அல்லது ஹோட்டல்களில் உணவின் விலையை உயர்த்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. தட்டுப்பாட்டை சமாளிக்க மின்சார அடுப்புகளுக்கு மானியம் வழங்க ஹோட்டல் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.