சிலிண்டர் பதுக்கினால் கடும் நடவடிக்கை என அமைச்சர் சக்கரபாணி அதிரடி எச்சரிக்கை

சிலிண்டர் பதுக்கினால் கடும் நடவடிக்கை என அமைச்சர் சக்கரபாணி அதிரடி எச்சரிக்கை

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவசர ஆலோசனை நடத்தினார். வணிக ரீதியான சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் நிலையைத் தவிர்க்க இந்த முக்கியக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 20 நாட்களுக்கு கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதேவேளையில், தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சிலிண்டர்களை சட்டவிரோதமாகப் பதுக்குவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பான அடுத்தகட்ட முடிவுகளை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *