தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
March 11, 2026

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இயற்கை உபாதைக்காக சென்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், காட்டில் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது உறுதியானது. இந்த கோர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் வேளையில் சட்டம் ஒழுங்கு குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.