புதுச்சேரி உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மீண்டும் தொடங்கிய விறகு அடுப்பு சமையல்

புதுச்சேரி உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மீண்டும் தொடங்கிய விறகு அடுப்பு சமையல்

ஈரான் போர் சூழலால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் புதுச்சேரி உணவகங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. மாற்று வழியின்றி பல உணவகங்கள் இப்போது தங்களின் வாகன நிறுத்துமிடங்களிலேயே விறகு அடுப்புகளை அமைத்துச் சமைக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலை நீடித்தால் உணவகங்களை மூட வேண்டியிருக்கும் என உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ள நிலையில், தற்போது சவுக்கு உள்ளிட்ட விறகுகளின் விற்பனை நகரில் பெருமளவு அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *