ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறதா
March 11, 2026

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சின்னசாமி மைதானத்தில் தொடக்க விழா மற்றும் முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக முழுமையான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த வாரத்தில் முதற்கட்டப் போட்டிகளுக்கான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதிகளைப் பொறுத்து இரண்டாம் கட்ட அட்டவணை பின்னர் இறுதி செய்யப்படும்.