வளைகுடா நாடுகளின் வங்கிகளை குறிவைக்கும் ஈரான் ராணுவம் மீண்டும் போர் பதற்றம்
March 11, 2026

ஈரான் மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. தெஹ்ரானில் உள்ள வங்கி ஒன்றின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஊழியர் ஒருவர் பலியானார். இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் ‘கதம் அல்-அன்பியா’ படைப்பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பால் துபை, சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவனங்கள் பெரும் அச்சத்தில் உள்ளன. ஏற்கனவே அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், தற்போது நிதித்துறையை முடக்க ஈரான் எடுத்துள்ள இந்த முடிவு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.