கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு பெரும் பரபரப்பு
March 11, 2026

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் காரைக்குடி அலுவலகத்தில் நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இன்று காலை அலுவலகம் வந்த ஊழியர்கள் சிதறிக்கிடந்த பாட்டில்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எஸ்பி சிவபிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், கூட்டணி கட்சி எம்பி அலுவலகத்திற்கே பாதுகாப்பு வழங்க திமுக அரசு தவறிவிட்டதாக விமர்சித்துள்ளார். தற்போது குற்றவாளிகளைப் பிடிக்க காரைக்குடி போலீசார் அப்பகுதியிலுள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.