ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தாபா காமேனிக்கு வழங்கப்பட்டுள்ள அதீத ரகசிய பாதுகாப்பு
March 11, 2026

அமெரிக்காவின் தாக்குதலில் அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மகன் மோஜ்தாபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்ற பிறகு அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தைக்கு ஏற்பட்ட நிலை இவருக்கு ஏற்படாமல் இருக்க, மிகவும் ரகசியமான இடத்தில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரைப் பாதுகாக்க ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் விசுவாசமான ‘NOPO’ சிறப்புப் படை களமிறக்கப்பட்டுள்ளது. இந்த கறுப்பு உடை வீரர்கள் நேரடியாக உச்ச தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள். மோஜ்தாபாவை ஒரு பெயரளவு தலைவராக முன்னிறுத்தி, ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) நாட்டை முழுமையான ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.