தாய்லாந்தில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து நூலிழையில் உயிர் தப்பிய 133 பயணிகள்
March 11, 2026

ஹைதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புக்கெட் நகருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓடுதளத்தில் விமானம் இறங்கிய போது அதன் முன்பக்க சக்கரம் உடைந்ததோடு டயரும் வெடித்துச் சிதறியது. இந்த எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் மிகுந்த அச்சத்தில் கூச்சலிட்டனர்.
விமானத்தில் மொத்தம் 133 பேர் பயணம் செய்தனர். இருப்பினும் விமானியின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர். முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விமானிகளிடம் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.