சிலிண்டர் புக் செய்யும் எண் வேலை செய்யவில்லை மக்கள் கடும் அவதி

இண்டேன் கேஸ் ரீஃபில் புக்கிங் செய்வதற்காக வழங்கப்பட்ட 77189 55555 என்ற எண் திடீரென செயலிழந்ததால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் சிறு உணவகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
புக்கிங் செய்ய முடியாமல் போனதால் நாகை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் காலி சிலிண்டர்களுடன் ஏஜென்சிகளில் குவிந்து வருகின்றனர். மாற்று எண்களும் வேலை செய்யாததால் பொதுமக்கள் விறகு அடுப்பு மற்றும் இண்டக்ஷன் ஸ்டவ்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இந்த திடீர் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பக் கோளாறு பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.