ஒரே ஆண்டில் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கி மத்திய அரசு சாதனை
March 10, 2026

2025-2026 ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 43 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார இணை அமைச்சர் அனுபிரியா படேல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 11,682 எம்பிபிஎஸ் இடங்களும், 8,967 முதுநிலை மருத்துவ இடங்களும் அதிகரிக்கப்பட்டு தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் கல்வியை மேம்படுத்த மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைந்த கல்லூரிகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் 157 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று கட்டங்களாக 41,332 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் சேர்க்கை இடங்களை உயர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.