ஈரானில் போர் மேகங்கள் நகரங்களை விட்டு வெளியேறி கிராமங்களில் தஞ்சமடையும் மக்கள்

ஈரானில் போர் மேகங்கள் நகரங்களை விட்டு வெளியேறி கிராமங்களில் தஞ்சமடையும் மக்கள்

தலைமை மதகுரு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிர வான்வழித் தாக்குதல்களால் ஈரான் பற்றி எரிகிறது. தலைநகர் தெஹ்ரானில் குண்டுவெடிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதுவரை சுமார் 1,300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

புதிய தலைமை மதகுருவாக மோஜ்தபா கமேனி பதவியேற்றுள்ள சூழலில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது. அதே சமயம், எண்ணெய் போக்குவரத்தை முடக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதி திரும்புமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *