மத்திய அரசின் தவறான வெளியுறவு கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் போராட்டம்

மத்திய அரசின் தவறான வெளியுறவு கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் போராட்டம்

மத்திய பாஜக அரசின் தவறான வெளியுறவு கொள்கையை கண்டித்து, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சர்வதேச மகளிர் தினத்தன்று சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த விலை உயர்வால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கையால் வளைகுடா நாடுகளுடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை பாதிக்கும் என காங்கிரஸ் எச்சரித்துள்ளது. இதன் காரணமாகவே உள்நாட்டில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹசீனா சையத் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *